வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு வருஷா வருஷம் பரம்வீர் சக்ரா குடுக்கணும். அத்தனை பயணிகளை தினம் தினம் உயிரைக்குடுத்து காப்பாத்துறாங்களே.
திருப்பூர்: திருப்பூரில் அரசு டவுன் பஸ்சின் ஜன்னல் பகுதி கழன்று ரோட்டில் விழுந்தது. இதனால், பயணிகள், பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து குன்னத்துாருக்கு அரசு டவுன் பஸ் (எண்:10 - டிஎன்.38.என்.2981) நேற்று காலை 9:00 மணியளவில் சென்று கொண்டிருந்தது. ரயில்வே ஸ்ேடஷன் பஸ் ஸ்டாப் அருகே உள்ள வளைவில் திரும்பிய போது, பின்புற கதவு அருகேயுள்ள ஒரு ஜன்னல், தனியாக கழன்று காற்றில் பறந்து, ரோட்டில் விழுந்தது. ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி ரோட்டில் விழுந்து உடைந்து சிதறியது.இதனால், பயணிகளும், பஸ்சை பின் தொடர்ந்து வந்த பிற வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சுதாரித்து கொண்டு தங்கள் வாகனத்தை திருப்பிச் சென்றனர். வழக்கமாக கடும் மக்கள் நெரிசலுடன் காணப்படும் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் அந்நேரத்தில் கூட்டம் இல்லை. வாகனங்களும் குறைவாக வந்த நிலையில் இந்த ஜன்னல் பறந்து விழுந்த போது எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.பஸ்சின் கண்டக்டர் இறங்கி ஓடிச் சென்று, ரோட்டில் விழுந்து கிடந்த ஜன்னலை எடுத்து வந்து பஸ்சுக்குள் பத்திரமாக வைத்தார். அதன் பின் அங்கிருந்து பஸ் புறப்பட்டுச் சென்றது.
பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு வருஷா வருஷம் பரம்வீர் சக்ரா குடுக்கணும். அத்தனை பயணிகளை தினம் தினம் உயிரைக்குடுத்து காப்பாத்துறாங்களே.