கோவில் திருப்பணிகள் அரசியல் கட்சியினர் மனு
திருப்பூர்: அவிநாசி, வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் உள்ள பழமையான ஆகாசராயர் கோவிலில் அறநிலையத்துறை வழிகாட்டுதலுடன், கும்பாபிேஷக திருப்பணிகள் நடக்கின்றன. பல்வேறு அரசியல் கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கோவில் திருப்பணி தொடர்பாக அளித்த மனு:கோவில் பிரகாரத்தில், சுற்றுச்சுவருடன் கூடிய அலங்கார வளைவு கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. திருப்பணிகளை, இருவேறு தரப்பினர் சமூக பிரச்னையாக மாற்ற முயற்சிக்கின்றனர்.சமூக ஒற்றுமைக்கான கூட்டம் நடத்த வலியுறுத்தி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணாத செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இடையூறு இல்லாமல் கோவில் பணிகள் நடக்கவும், சமூக அமைதியை நிலைநாட்டவும், விரைவில் கும்பாபிேஷகம் நடத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.