மேலும் செய்திகள்
பிளஸ் 1 தமிழ் தேர்வில் 311 பேர் 'ஆப்சென்ட்'
06-Mar-2025
ஆங்கில தேர்வில் 339 பேர் ஆப்சென்ட்
07-Mar-2025
திருப்பூர்; பிளஸ் 1 பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வை, மாணவ, மாணவியர், தனித்தேர்வர் உட்பட, 803 பேர் எதிர்கொள்ளவில்லை. ஆங்கிலத்தை விடவும் தமிழில் அதிக மாணவர் 'ஆப்சென்ட்' ஆகினர்.பிளஸ் 1 பொதுத்தேர்வு, 5ம் தேதி துவங்கியது. தமிழ் தேர்வு எழுத, 25 ஆயிரத்து, 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 25 ஆயிரத்து, 245 பேர் தேர்வெழுதினர்; 409 பேர் பங்கேற்கவில்லை. 384 தனித்தேர்வர்களில், 110 பேர் 'ஆப்சென்ட்'. தமிழ் தேர்வை, மொத்தம், 519 பேர் தேர்வெழுதவில்லை. அதேநேரம், ஹிந்தி தேர்வுக்கு விண்ணப்பித்த, ஏழு பேரும் பங்கேற்று, தேர்வெழுதினர். பிரெஞ்சுதேர்வில் ஒருவர் மட்டும் பங்கேற்வில்லை. 517 பேர் தேர்வெழுதினர்.ஆங்கிலத்தேர்வு, 10ம் தேதி நடந்தது. விண்ணப்பித்த, 25 ஆயிரத்து, 863 பேரில், 259 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 184 தனித்தேர்வர்களில், 159 பேர் தேர்வெழுதினர்; 25 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. ஆங்கிலத்தேர்வை மொத்தம், 284 பேர் எழுதவில்லை. பிளஸ் 1 மொழித்தாள் தேர்வை பொறுத்த வரை, ஆங்கிலத்தை விட, தமிழில் தான் அதிக மாணவர் 'ஆப்சென்ட்' ஆனது குறிப்பிடத்தக்கது.
06-Mar-2025
07-Mar-2025