மேலும் செய்திகள்
வரும் 25ல் தபால் துறைகுறைதீர் நாள் கூட்டம்
09-Mar-2025
திருப்பூர் : திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும், 24ம் தேதி தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:தபால் துறை வழங்கும் சேவைகளை பற்றி விவாதிக்க, குறைகள் இருந்தால் தெரிவிக்க, திருப்பூர் தலைமை தபால் நிலையம், கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும், 24ம் தேதி, மாலை 4:00 மணிக்கு தபால் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. தபால் துறை சார்ந்த யோசனை, புகார்கள் இருப்பின், வரும், 14ம் தேதிக்குள், 'பட்டாபிராமன், தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் 641601' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
09-Mar-2025