மேலும் செய்திகள்
சனிப் பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் பரவசம்
18-Aug-2024
திருப்பூர் : திருப்பூர் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மூலவர் விஸ்வேஸ்வரர், அதிகார நந்தி, உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரர், வெளி பிரகாரத்தை வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அலகுமலை கைலாசநாதர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில், சித்தம்பலம் நவகிரக கோட்டை உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
18-Aug-2024