மேலும் செய்திகள்
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
25-Feb-2025
உடுமலை::பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்டம், தேசிய பசுமைப்படையில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவில் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார்.தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் மாணவர்களை வாழ்த்தி பேசி, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மரக்கன்று நடுதல், மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் பை தவிர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இயற்பியல் ஆசிரியர் கணேசபாண்டியன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினார். கணித ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.
25-Feb-2025