உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அசல், 10 லட்சம்: வட்டி, 50 லட்சம் ரூபாய்; வட்டிக்கு மேல் வட்டி வசூலித்தவர் கைது

அசல், 10 லட்சம்: வட்டி, 50 லட்சம் ரூபாய்; வட்டிக்கு மேல் வட்டி வசூலித்தவர் கைது

காங்கயம்; கந்து வட்டி புகாரின் பேரில், ஒருவரை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.காங்கயம் இல்லியம்புதுாரைச் சேர்ந்தவர் செல்லத்துரை, 57. சென்ட்ரிங் கான்ட்ராக்ட் வேலை செய்கிறார். தனது தொழிலை விரிவுபடுத்த அவர், காங்கயம், அழகேகவுண்டன்புதுார் கோவிந்தசாமியிடம், கடந்த 2019ல், 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.அக்கடனுக்கு இதுவரை வட்டி, அசல் என, 6 ஆண்டுகளில், 60 லட்சம் ரூபாய் வரை செல்லதுரை திருப்பி செலுத்தியுள்ளார். கடனுக்காக கொடுத்த காசோலைகள் மற்றும் கடன் பத்திரத்தை கேட்ட போது, கோவிந்தசாமி திருப்பி தர மறுத்ததாகத் தெரிகிறது.இதுகுறித்து கேட்ட போது, செல்லத்துரை மற்றும் அவரது மனைவி இருவரையும், கோவிந்தசாமி, ஜாதி பெயரை குறிப்பிட்டு, தகாத வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக, செல்லத்துரை காங்கயம் போலீசில் புகார்அளித்தார்.அதன் பேரில் காங்கயம் போலீசார் கோவிந்தசாமி மீது, வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கந்து வட்டி தடுப்பு சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் வீட்டில் நடந்த சோதனையில், மேலும், சில கடன் பத்திரங்கள், காசோலைகளை போலீசார் கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி