உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்தல் விதிமீறல் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை அவசியம்

தேர்தல் விதிமீறல் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை அவசியம்

திருப்பூர்;'தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என, தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தியுள்ளார்.திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.உரிய ஆவணமின்றி பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்வது, பட்டுவாடா செய்வது தொடர்பாக தகவல் கிடைத்த உடன், தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவினர், குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.'கட்சி கூட்டங்களில், சுவர் விளம்பரம், பேனர், போஸ்டர், துண்டு பிரசுரம், பந்தல், மைக்செட், ஊடக விளம்பரங்கள் உட்பட அனைத்தையும் வீடியோ பதிவு செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு, அச்சு ஊடகம், ரேடியோ, 'டிவி', சமூக வலைதளங்களில் வெளியாகும் வேட்பாளர்களின் விளம்பரங்களை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்'' என, தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.டி.ஆர்.ஓ., ஜெய்பீம், சப்கலெக்டர் சவுமியா, பயிற்சி கலெக்டர் கிர்திகா உட்பட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை