உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம்

ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம்

உடுமலை : தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு, 4 மாத ஊதிய நிலுவையை கண்டித்து, ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது.அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் தலைமை வகித்தார்.இதில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்கள் கடுமயாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், வேலை அட்டை பெற்று, வேலைசெய்யத் தயாராக உள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லை, என உள்ளாட்சி நிர்வாகங்களால் மறுக்கப்பட்டு வருகிறது.நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவும், ஊதியத்தை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தி, வரும், 21ம் தேதி, ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை