உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்ட் அருகே மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பஸ் ஸ்டாண்ட் அருகே மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க கூடாது, என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதன் வடக்கு வாசல் பகுதியில், யசோதா ராமலிங்கம் லே-அவுட் குடியிருப்பு பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து, பா.ம.க., மாவட்ட அமைப்பு செயலாளர் மனோகரன், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில், யசோதா ராமலிங்கம் லே-அவுட்டில், தெற்கு பார்த்த கட்டடத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அரசு மற்றும் நீதிமன்ற விதிமுறைகளை மீறி, தேசிய நெடுஞ்சாலை, நுாற்றுக்கணக்கான வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதி, பஸ் ஸ்டாண்ட், தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள், வங்கிகள், திருமண மண்டபம், நகராட்சி பூங்கா என, மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி, கழுத்தறுத்தான் ஓடை நீர் நிலை கரையில் அமைக்கப்படுகிறது.இதனால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும். ஏற்கனவே, இப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் மூடப்பட்டது.அதே பகுதியில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மக்கள் எதிர்ப்பை மீறி, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க கூடாது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி