உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காலாண்டு தேர்வு அட்டவணை 5 நாள் மட்டுமே விடுமுறை

காலாண்டு தேர்வு அட்டவணை 5 நாள் மட்டுமே விடுமுறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், வரும், 19 முதல், 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடக்கவுள்ளது. செப்., 28 துவங்கி, ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின், அக்., 3ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு: வரும், 19ம் தேதி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவருக்கான காலாண்டு தேர்வு துவங்குகிறது. மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, 21 முதல், 27ம் தேதி வரை முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது.ஆறு முதல் பத்தாம் வகுப்புக்கு, 20ம் தேதி தமிழ், 21ம் தேதி விளையாட்டு கல்வி, 23, 24 மற்றும், 25ம் தேதி முறையே ஆங்கிலம், விருப்ப மொழிப்பாடம், கணக்கு தேர்வு நடக்கிறது.வரும், 26ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. ஆறு, எட்டு, பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலையிலும், ஏழு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு மதியம் துவங்கி, மாலை வரையும் தேர்வுகள் நடக்கும். இவ்வாறு அதில் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை