உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் போராட்டம்

ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் போராட்டம்

உடுமலை: உடுமலை, கொடிங்கியம் ஊராட்சியில், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, 3 மாதமாக சம்பளம் வழங்காததைக்கண்டித்து போராட்டம் நடந்தது.மா.கம்யூ., உடுமலை ஒன்றியம், கொடிங்கியம் ஊராட்சியில், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கொடிங்கியம் ஊராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.கமிட்டி உறுப்பினர் தமிழ்தென்றல் தலைமை வகித்தார். கிளைச்செயலாளர்கள் வஞ்சிமுத்து, ஈஸ்வரன், ரத்தினசாமி, சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, ஊராட்சி செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை