மேலும் செய்திகள்
ஒன்றிய அலுவலகம் முற்றுகை
21-Feb-2025
உடுமலை; உடுமலை அருகே, ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு, 3 மாதமாக ஊதியம் வழங்காததைக்கண்டித்தும், உடனடியாக முழுமையாக ஊதியம் வழங்க வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டம் நடந்தது.மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், கிளைச்செயலாளர்கள் இளையபாரதி, ராமசாமி, துரை, மகேஸ்வரி, செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஊராட்சி செயலரிடம் மனு வழங்கப்பட்டது.
21-Feb-2025