சேவூர் ஸ்ரீவாலீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
அவிநாசி:அவிநாசி அருகே சேவூரில் அறம் வளர்த்த நாயகி அம்பிகை உடனமர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீராஜசரவண மாணிக்க வாசக சுவாமி முன்னிலையில் நேற்று கும்பாபிேஷகம் நடைபெற்றது. ராஜகோபுரம், வாலீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்பிகை, கல்யாண சுப்ரமணியர், கனக சபை உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கும், மூலவருக்கும் ஒரே நேரத்தில், கும்பாபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, தசாதானம், தசா தரிசனம், மஹா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலையில் சுவாமி திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.