உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உடுமலை, ; தேசிய அறிவியல் தினத்தையொட்டி, சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 'தமிழில் அறிவியல்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் இன்பக்கனி தலைமை வகித்தார்.பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சித்ராதேவி வரவேற்றார். தாராபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்ஜோதி தேசிய அறிவியல் தினம் குறித்து மாணவர்களிடம் பேசினார். வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், ஏஞ்சலின் பிருந்தா பங்கேற்றனர்.திருப்பூர் மாவட்ட சிறார் இதழ்கள் ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், அறிவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். ஆசிரியர் கவிதா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை