உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாப்பிட வந்தவருக்கு அரிவாள் வெட்டு

சாப்பிட வந்தவருக்கு அரிவாள் வெட்டு

வெள்ளகோவில்; முத்துாரில் ஓட்டலில் சாப்பிட வந்தவருக்கு நடந்த அரிவாள் வெட்டு குறித்து போலீசார் விசா ரிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், முத்துாரை சேர்ந்தவர் முருகேசன், 43, தொழிலாளி. இவர் தனது வேலையை முடித்து விட்டு நேற்று மதியம் முத்துாரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அங்கு முருகேசனுக்கும், புரோட்டா மாஸ்டராக உள்ள கரூரை சேர்ந்த பூமிநாதன், 50 என்பவருக்கு உணவு பரிமாறுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த பூமிநாதன் அருகே காய்வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து முருகேசனை சாரமாரியாக கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி