உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எஸ்.ஜி.எப்.ஐ., மண்டல அணி தேர்வு; பில்டர்ஸ் கல்லுாரியில் நாளை துவக்கம் 

எஸ்.ஜி.எப்.ஐ., மண்டல அணி தேர்வு; பில்டர்ஸ் கல்லுாரியில் நாளை துவக்கம் 

திருப்பூர்: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) மண்டல அணிக்கான வீரர், வீராங்கனை தேர்வு போட்டி, நத்தக்காடையூரில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரியில், நாளை (31ம் தேதி) மற்றும் செப்., 8ம் தேதி நடக்கிறது.பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய, எஸ்.ஜி.எப்.ஐ., மண்டல அணித்தேர்வு, 14, 17 மற்றும், 19 வயது பிரிவினருக்கு, காங்கயம் அடுத்த நத்தக்காடையூர், பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரியில் நாளை (31ம் தேதி) நடக்கிறது. கூடைப்பந்து, ேஹண்ட்பால், கபடி மாணவியர் அணித்தேர்வில் நான்கு மாவட்டங்களில் இருந்து வீராங்கனையர் பங்கேற்கின்றனர். வரும், செப்., 8 ம் தேதி கூடைப்பந்து, கபடி, ேஹண்ட்பால் மாணவர் அணி தேர்வு நடக்கிறது.வீராங்கனையர் தேர்வுக்கான ஏற்பாடுகளை, முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்திலதிபன் செய்து வருகிறார். திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில், 60 பேர் கொண்ட உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர் குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை