உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீராதாகிருஷ்ண கல்யாண மகா உற்வசம்

ஸ்ரீராதாகிருஷ்ண கல்யாண மகா உற்வசம்

திருப்பூர்: ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின், 70 வது பீடாதிபதி, ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமியின், 57 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீராதா கிருஷ்ண கல்யாண மகா உற்சவம் நேற்று துவங்கியது.திருப்பூர், ஓடக்காடு ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடத்தில், நேற்று துவங்கி இரண்டு நாட்களுக்கு, ஸ்ரீராதா கிருஷ்ண கல்யாண உற்சவம் நடக்கிறது. நேற்று காலை, 9:00 மணிக்கு, தோடய மங்களம், குரு கீர்த்தனைகளுடன், அஷ்டபதி துவங்கியது.இரவு 8:00 மணிக்கு, கணேசாதி தேவதா தியான கீர்த்தனைகள், சம்பிரதாய தீப பிரதக்ஷனம், திவ்ய நாம பஜனை, போலத்ஸ்வம் நடந்தது. இன்று, உஞ்ச விருத்தி, ஸ்ரீராதா கல்யாண மகா உற்சவம், ஸ்ரீஆஞ்சநேய உற்சவம் மகாதீபாராதனை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ