உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து

பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து

பல்லடம்: பல்லடம் அடுத்த கரைப்புதுார் கிராமத்தில், கிஷோர்குமார் என்பவருக்கு சொந்தமான கழிவுப்பஞ்சு குடோன் உள்ளது. நேற்று காலை, குடோனில் இருந்த கழிவுப்பஞ்சுகளில் மளமளவென தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. கழிவுப்பஞ்சு முற்றி லுமாக எரிந்த நிலையில், குடோனில் இருந்த அரவை இயந்திரங்களும் தீப்பிடித்து எரிந்தன.பல்லடம், திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் மேற்கூரையை உடைத்தும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.கூடுதல் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை தீயில் கருகி நாசமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை