உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுத்தேர்வில் சாதிக்கும் எண்ணம் ஸ்ரீஹயக்ரீவர் வழிபாட்டால் திண்ணம்

பொதுத்தேர்வில் சாதிக்கும் எண்ணம் ஸ்ரீஹயக்ரீவர் வழிபாட்டால் திண்ணம்

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாட்டில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பங்கேற்று கூட்டு பிரார்த்தனை செய்தனர்.பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் வேண்டி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.பதினோராம் ஆண்டு வழிபாடு கோலாகலமாக துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி, காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாற்றுமறை, மகாதீபாராதனை நடந்தது.யாகவேள்வியில்,பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியர் பெயர் மற்றும் நட்சத்திர பெயரில், சிறப்பு அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் கையில் கட்டும் ரக்ைஷ மற்றும் ஹயக்ரீவர் வழிபாட்டுக் கையேடு வழங்கப்பட்டது.கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில், யாகவேள்வி பூஜைகள் நடந்தன.பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு, பொதுத்தேர்வில் சாதனை படைக்க வேண்டுமென, கூட்டு பிரார்த்தனை செய்தனர். மாணவ, மாணவியருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வரும், மார்ச் 2ல்பிளஸ் 2 மாணவருக்கான வழிபாடு; மார்ச் 9ல் பிளஸ் 1; மார்ச் 16ல் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை