உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாயில்லா ஜீவன் காட்டிய அன்பு: கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு; தைரியம் கண்டு போலீஸ் வியப்பு

வாயில்லா ஜீவன் காட்டிய அன்பு: கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு; தைரியம் கண்டு போலீஸ் வியப்பு

பல்லடம் : பல்லடத்தில், கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி மீட்கப்பட்ட நிலையில், அவரது தைரியத்தை கண்ட போலீசார் வியப்படைந்தனர்.பல்லடம், செட்டிபாளையம் ரோடு, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி 70; விவசாயி. இவரது மனைவி நாச்சம்மாள், 65. கண்பார்வை கோளாறு இருப்பதால், சமீபத்தில் தான் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கண் கண்ணாடி அணிந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, நடந்து சென்றபோது, பார்வை சரியாக தெரியாத நிலையில், அருகிலுள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தார்.நாச்சம்மாளை காணாத குடும்பத்தினர் அவரைத் தேடியபடி சத்தம் போட்டு தேடி வந்தனர். இதற்கிடையே, கிணற்றில் விழுந்த நாச்சம்மாள் கூப்பிடும் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. ஆனால், நாச்சம்மாள் கிணற்றில் விழுந்ததை அறிந்த நாய், குரைத்ததை கேட்டு, அவர் கிணற்றில் விழுந்ததை குடும்பத்தினர் உறுதி செய்தனர்.உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கிய தீயணைப்பு படை வீரர்கள், நாச்சமாளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நாச்சம்மாள் கிணற்றில் விழுந்ததை அறிந்த நாய், குரைத்ததை கேட்டு, அவர் கிணற்றில் விழுந்ததை குடும்பத்தினர் உறுதி செய்தனர்

சரி... சரி... வரட்டும்!

போலீசார் கூறியதாவது:கண்பார்வை தெரியாமல் கிணற்றுக்குள் தவறி விழுந்த நாச்சம்மாள், சிறிதும் பயப்படாமல் தைரியமாக இருந்துள்ளார். அவர் கிணற்றில் விழுந்ததை அறிந்த குடும்பத்தினர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியதும், 'சரி...சரி வரட்டும்,' என, நாச்சம்மாள் சாவகாசமாக பதில் அளித்துள்ளார். மேலும், தீயணைப்புத்துறை வரும் வரை எந்த கூச்சலும் போடாமல், மீட்பு பணிக்கு ஒத்துழைத்துள்ளார். 65 வயதான பாட்டியின் தைரியம் வியப்பினை ஏற்படுத்தியது.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ