உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுலா மையத்தை இணைக்கும் பிரதான ரோடு; குறுகியதாக உள்ளதால் அவதி

சுற்றுலா மையத்தை இணைக்கும் பிரதான ரோடு; குறுகியதாக உள்ளதால் அவதி

உடுமலை : உடுமலை திருமூர்த்திமலைக்கு செல்லும் பிரதான ரோடு மற்றும் பாலங்கள் குறுகலாக உள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.உடுமலை அருகேயுள்ள சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ள திருமூர்த்திமலைக்கு, கோவை, பொள்ளாச்சி மற்றும் கேரளா மாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணியர், பொதுமக்கள், பொள்ளாச்சி - பழநி ரோட்டில், கெடிமேடு அருகே, ஆனைமலை ரோடு வழியாக வந்து, திருமூர்த்திமலைக்கு செல்கின்றனர்.இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனால், பொள்ளாச்சி பகுதியில், ரோடு அகலப்படுத்தப்பட்ட நிலையில், உடுமலையில் ரோடு விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.அதிலும், வாளவாடியிலிருந்து விளாமரத்துப்பட்டி வழியாக, தளி செல்லும் ரோடு, மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாக உள்ளது.ரோடுகளில் வளைவுகள் அதிகளவு உள்ளதோடு, ரோட்டை கடக்கும் ஓடைகள் மற்றும் பி.ஏ.பி., கால்வாய் பாலங்களும், மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இதனால், இந்த வழித்தடத்தில் வரும் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல், பாதிப்பு ஏற்படுகிறது.ஒரே சமயத்தில் எதிர், எதிரே வாகனங்கள் வரும் போது, ஒதுங்க வழியில்லாமல், ரோட்டோர பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது.மேலும், இந்த வழித்தடத்தில் ஏராளமான கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ள நிலையில், குறுகலான ரோடு மற்றும் குண்டும், குழியுமாக காணப்படுவதால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.எனவே, இந்த ரோட்டை அகலப்படுத்தி, இரு வழிப்பாதையாக மாற்றவும், ரோட்டிலுள்ள பாலங்களை தரம் உயர்த்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !