உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் விரயம் ஊராட்சி மெத்தனம்

குடிநீர் விரயம் ஊராட்சி மெத்தனம்

அனுப்பர்பாளையம்:திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, வாரச்சந்தை வளாகத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. தொட்டியில் குடிநீர் நிரப்பும் ஊராட்சி ஊழியரின் கவனக்குறைவால், தொட்டியில் குடிநீர் நிரம்பி அடிக்கடி விரயமாகி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த வாரம் குடிநீர் நிரம்பி அருகில் உள்ள சந்தைக்கடை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.இது குறித்து அப்பகுதி பொது மக்கள் ஊராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் பற்றாகுறை உள்ள நிலையில் குடிநீர் தினமும் விரயமாகி வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பா.ஜ மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, ஒன்றிய பொது செயலாளர் குமார் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ