உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீக்கப்படாத பசலி எனும் சொல் பூசாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

நீக்கப்படாத பசலி எனும் சொல் பூசாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

பல்லடம்:பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், 'பசலி' என்ற சொல் நீக்கப்படவில்லை என, கோவில் பூசாரிகள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.அதன் மாநில தலைவர் வாசு அறிக்கை:தமிழக கோவில்கள் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களில், 'பசலி'' என்ற அந்நியச் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக, உரிய தமிழ் சொற்களை பயன்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.அதற்கு மாற்றாக, 'நிலவரி ஆண்டு' என்ற தமிழ் சொல்லை பயன்படுத்த வேண்டும் என, தொடர்ந்து பலமுறை நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 'நிலவரி ஆண்டு' என்ற சொல்லை பயன்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருவாய்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விளக்கம் அளிக்க வேண்டும்.தொடர்ந்து, பத்து ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும், 'நிலவரி ஆண்டு' என்ற சொல்லை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்து விவாதித்து நிலவரி ஆண்டு என்ற பெயரை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை