உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்விப்பணியின் புனிதம் ஆசிரியர்களுக்கு கவுரவம்!

கல்விப்பணியின் புனிதம் ஆசிரியர்களுக்கு கவுரவம்!

திருப்பூர்;திருப்பூர் திருக்குறள் பேரவை சார்பில், கற்பித்தல் பணி மட்டுமின்றி, மாணவர் நலன் சார்ந்த பிற பணிகளில் சேவை மனப்பான்மையுடன் ஈடுபடும் ஆசிரியர்களில், நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, 'லட்சிய ஆசிரியர்' விருது வழங்கப்பட்டது.திருப்பூர், ராயபுரம் ரோட்டரி மெட்ரிக்., பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, திருக்குறள் பேரவை தலைவர் அரங்கசாமி, தலைமை வகித்தார். செயலாளர் வனஜா வரவேற்றார். நஞ்சப்பா பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் துரைசாமி, பழனியம்மாள் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஏ.துரைசாமி, 'நிட்மா' தலைவர் அகில் ரத்தினசாமி, பேரவை துணை தலைவர் கலாதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினார்.கருப்பகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் வாஞ்சிநாதன், ரோட்டரி மெட்ரிக்., பள்ளி முதல்வர் தீபா வினித்ரா, கூலிபாளையம் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியை திருவருட்செல்வி ஆகியோருக்கு, லட்சிய ஆசிரியர் விருது, கேடயம், பாராட்டு சான்றிதழ், திருவள்ளுவர் சிலை, நினைவு பரிசு மற்றும் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், தங்கவேல் (தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்), தங்கராஜ் (தாய் தமிழ்ப்பள்ளி), மோகன்ராஜ் (வண்ணத்தமிழ் வகுப்பறை) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை, ஜெயக்குமார் தொகுத்து வழங்கினார். உலக திருக்குறள் பேரவை துணை செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.---சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ