உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீரை காய்ச்சி குடித்தால் டெங்கு அச்சமில்லை

குடிநீரை காய்ச்சி குடித்தால் டெங்கு அச்சமில்லை

உடுமலை;மழை காலம் துவங்கியுள்ள நிலையில், டெங்கு பாதிப்புகள் அதிகரித்துள்ளது. குடிநீரை காய்ச்சி குடிக்கவும், பொதுஇடங்களில் நன்னீர் தேங்காமல் தடுக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:உடுமலை பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படவில்லை. இருப்பினும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது; தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வீடுகளின் அருகில் டயர், ஆட்டு உரல், பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கி, லார்வா, கொசு உற்பத்தி ஆகாத வகையில் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்.தங்களது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொண்டாலே டெங்கு காய்ச்சல் அச்சம் இல்லாமல் இருக்கலாம். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உடனே சிகிச்சை பெற வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி