பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூர் சக்தி விருது
அனுப்பர்பாளையம்; திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம், கனவு மற்றும் ஸ்டார் அசோசியேட்ஸ் இணைந்து நடத்திய 'திருப்பூர் சக்தி விருது -- 2025' வழங்கும் விழா 15 வேலம் பாளையம் பார்ச்சூன் ஹோட்டலில் நடந்தது.முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ், தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மென் திறன் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் லாவண்யா ேஷாபனா, சிறப்புரையாற்றினார். பெண் படைப்பாளிகள் அல்லி பாத்திமா, பத்மஜா, இவள் பாரதி, கயல், சிவசெல்வி உள்பட 25 பேருக்கு சக்தி விருது வழங்கப்பட்டது. சங்க செயலாளர் பாலசுப்ரமணியன், நன்றி கூறினார்.