நடப்பாண்டிற்கான சீருடை வினியோகம் நிறைவு
உடுமலை: மடத்துக்குளம் வட்டாரத்தில் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசின் சார்பில் நான்கு செட் சீருடைகள் வழங்கப்படுகின்றன. தற்போது மடத்துக்குளம் வட்டாரத்தில் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சீருடைகள் வழங்கப்பட்டன.மேலும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தமாக நான்கு செட் சீருடைகளும் தற்போது வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு வினியோகித்தனர்.