உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகரில் ரோடு சீரமைப்பதில் தாமதம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நகரில் ரோடு சீரமைப்பதில் தாமதம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

உடுமலை:உடுமலை நகர வீதியில், பாதாள சாக்கடை பணிகளுக்கு குழி தோண்டப்பட்டு, மீண்டும் சீரமைக்காமல் விட்டுள்ளதால், விபத்து ஏற்படுகிறது.உடுமலை நகரிலுள்ள பசுபதி வீதியில், பாதாளச்சாக்கடை குழிகளில் அடைப்பு ஏற்பட்டதையொட்டி, ரோடு தோண்டப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.பஸ் ஸ்டாண்டிலிருந்து தளி ரோடு செல்வதற்கு, பசுபதி வீதி பிரதான சாலையாக இருப்பதால், அவ்வழியாக நாள்தோறும் அதிகமான வாகன போக்குவரத்து உள்ளது. வணிக கடைகள் இருப்பதால், சரக்கு வாகனங்களும் அதிகளவில் அப்பகுதியை பயன்படுத்துகின்றன.இந்நிலையில், பாதாள சாக்கடை பணிகளுக்காக ரோட்டில் பெரிய குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து பத்து நாட்களாகியும், ரோடு சீரமைக்கப்படவில்லை. அப்பகுதியில் பெரிய பள்ளமாக மாறியுள்ளது.இரவு நேரங்களில், அடிக்கடி வாகனங்கள் பள்ளத்தில் தடுமாறி ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். சரக்கு வாகனங்கள் பள்ளத்தை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் ஆவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வழியில்லாமல் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக பள்ளத்தை சீரமைத்து, ரோட்டை சமன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை