மேலும் செய்திகள்
மடுகூர் தரைப்பாலம் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?
24-Feb-2025
பொங்கலுார் : பெருந்தொழுவில் இருந்து படியூர்-, சம்பந்தம்பாளையம் ரோட்டை இணைக்கும் இணைப்பு சாலை, 7.36 கிலோமீட்டர் நீளம் உள்ளது. திருப்பூர் - தாராபுரம் ரோடு கோவில் வழியிலிருந்து, திருப்பூர் - காங்கேயம் ரோட்டை இணைக்கும் இணைப்புச் சாலையாக இது உள்ளது.இந்த ரோடு பல ஆண்டு களுக்கு முன் போடப்பட்டது. அது தற்போது குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில், இந்த ரோடு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, 3.86 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் தரமான ரோடு அமைக்கப்படும் என்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
24-Feb-2025