உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் சதுர்த்தி விழா சிலைகளை அனுப்பும் பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தி விழா சிலைகளை அனுப்பும் பணி தீவிரம்

திருப்பூர்;விநாயகர் சதுர்த்திக்கு இன்னும், ஐந்து நாட்களே உள்ள நிலையில், தயாரித்து வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பும் பணி முழு வீச்சில் நடக்கிறது.விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு வரும், 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. அன்றைய தினம் ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி திருப்பூரில், இரு இடங்களில் முழு வீச்சில் நடந்தது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நேற்று முதல் விநாயகர் சிலைகளை நிர்வாகிகள் மூலம் பிரதிஷ்டை செய்யப்படும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அனுப்பும் பணியை, மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் துவக்கி வைத்தார். சிலையுடன், மரக்கன்றுகளும் கொடுத்து அனுப்பி வருகின்றனர்.மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 2 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்கிறோம். திருப்பூர் மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட உள்ளது. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 'குறைந்து வரும் ஹிந்து ஜன தொகை, தமிழகத்துக்கு ஆபத்து' என்ற தலைப்போடு கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ல் துவங்கி, 15ம் தேதி வரை என, ஒன்பது நாள் கொண்டாட திட்டமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். ஒவ்வொரு விநாயகருக்கும், பத்து மரக்கன்றுகளை நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். சிலைகளை பெற்று செல்லும் சிலையுடன், மரக்கன்று கொடுத்து அனுப்புகிறோம்.அந்தந்த பகுதி நிர்வாகிகள் மரக்கன்றுகளை நடுவதற்கான பணியை மேற்கொள்வர். இன்று (நேற்று) முதல் காப்பு கட்டி நிர்வாகிகள் விரதத்தை துவக்கியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை