/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காணக் கண் கோடி வேண்டினோம்... பக்தியால் மெய்யுருகி பஞ்சமூர்த்திகளை வணங்கினோம்!
காணக் கண் கோடி வேண்டினோம்... பக்தியால் மெய்யுருகி பஞ்சமூர்த்திகளை வணங்கினோம்!
கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடிய சிறப்பு பெற்றதுமான, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசித் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வைபவம் நேற்றிரவு நடந்தது. அதில், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீசண்முகநாதரும், காமதேனு வாகனத்தில் அம்மனும், ரிஷப வாகனத்தில்சண்டிகேஸ்வர பெருமானும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.