உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / களைகட்டும் படப்பிடிப்புகள்

களைகட்டும் படப்பிடிப்புகள்

திருப்பூர் அருகில் உள்ள கோபிச்செட்டிபாளையம் பகுதியில் முன்பெல்லாம் திரைப்படப் படப்பிடிப்பு அதிகளவில் நடைபெறும். கோபிச்செட்டிபாளையத்தில் நீர் செழிப்பு, பசுமை வனப்பு கேமரா கண்களுக்கு விருந்தாக அமைந்தது. தற்போது இங்கு, அவ்வளவாக படப்பிடிப்புகள் நடைபெறுவதில்லை.இதேபோல் 'மினி கோடம்பாக்கமாக' இருந்த பொள்ளாச்சியிலும் படப்பிடிப்புகள் குறைந்து விட்டன. தற்போது மீண்டும் படப்பிடிப்பு அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது. தற்போது, இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்கும் மலையாள படத்துக்காக உண்மையான ஓட்டல் போன்று பிளைவுட்களை கொண்டு ெஷட் அமைக்கப்படுகிறது. 'திரிஷ்யம் -3' படத்திற்கான ெஷட் என்று தெரிகிறது. இதை பார்க்கும் பொதுமக்கள், மொபைல்போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிடுவதால் வைரலாகி வருகிறது.''பொள்ளாச்சி மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் படம் எடுத்தால் வெற்றி பெறும் என்ற ராசியும் உள்ளது. குறிப்பாக, கிராமத்து கதைகள் என்றால், இந்த இடங்கள்தான் சிறப்பாக இருக்கும். படப்பிடிப்பு நடந்தால், விடுதிகளில் தங்குவதற்கு முதலி லேயே புக்கிங் நடைபெறும். வர்த்தகமும் சிறக்கும். பொள்ளாச்சியில் மட்டும், கடந்தாண்டு மலையாளம், தமிழ் என, 20 படங்கள் எடுக்கப்பட்டன. இந்தாண்டு இதுவரை, ஆறு படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது, மீண்டும் படப்பிடிப்பு களைகட்டியுள்ளது தெரிகிறது.தற்போது, இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்துக்காக, பொள்ளாச்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஓட்டல் ெஷட் அமைக்கப்படுகிறது. இயக்குனர், விரைவில் 'திரிஷ்யம் 3' படம் எடுக்கப்பட உள்ளது'' என்கிறார் படப்பிடிப்பு லோகேஷன் மேலாளர் ஒருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ