உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாதா, பிதா, குரு ஆசீர்வாதம் யாருக்கு கிடைக்கும்?

மாதா, பிதா, குரு ஆசீர்வாதம் யாருக்கு கிடைக்கும்?

திருப்பூர்:''செய்கின்ற வேலை, போகின்ற பாதை சரியாக இருந்தால், மாதா, பிதா, குருவின் ஆசீர்வாதம் என்றும் இருக்கும்,'' என்று காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் கூறினார்.திருப்பூர் திருவருள் ஜோதிட கல்வி மையம் சார்பில், 18வது சான்றளிப்பு விழா திருப்பூர், ஊத்துக்குளி ரோடு மண்ணரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. திருவருள் ஜோதிட கல்வி மையம் மனோஜ்குமார் தலைமை வகித்தார். சுந்தரராஜ பெருமாள் வரவேற்றார். ஈரோடு மையம் பேராசிரியர் மதிவாணன், கோவை மையம் பேராசிரியர் மருதாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, ஜோதிட பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:வாழ்வில் எதையும் எதிர்பார்த்து செய்ய கூடாது. உண்மையாக, நேர்மையாக இருந்தால் அனைத்தும் உங்கள் வசப்படும். இன்பம் வந்தால், துன்பம் வரும், பகல் வந்தால், இரவு வரும். அதுபோன்று வாழ்வில் மேடு, பள்ளம் என, அனைத்தும் வரும். இதை புரிந்து கடந்து செல்வது தான் மனிதன். ஜோதிடம் என்பது சாதாரண கலையல்ல. அற்புத கலை, இதனை பயன்படுத்தி வருபவரின் துன்பத்தை போக்கி, நல்வழிகாட்டும் வகையில் தங்கள் பணி இருக்க வேண்டும். செய்கின்ற வேலை, போகின்ற பாதை சரியாக இருந்தால், மாதா, பிதா, குருவின் ஆசீர்வாதம் என்றும் இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ