பஸ் ஸ்டாண்ட் நெருக்கடி தீருமா? புது மார்க்கெட் வீதி வழியாக பஸ் வெளியேற நேரக்கட்டுப்பாடு
திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டை விட்டு, புது மார்க்கெட் வீதி வழியாக பஸ்கள் வெளியேறுவதற்கு போக்குவரத்து போலீசார் திடீர் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளனர். ''பஸ் ஸ்டாண்டில் உடனடியாக பஸ்கள் நகர்ந்து செல்ல வழி இருக்காது'' என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதேசமயம், ''இது சோதனை முறையில்தான் அமலாக்கப்பட்டுள்ளது'' என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து புது மார்க்கெட் வீதி வழியாக வெளியேறும் பஸ்களுக்கு, நேற்று முதல், போக்குவரத்து போலீசார் திடீர் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளனர். பஸ்கள் காலை, 8:00 முதல், மதியம், 12:00 வரை; மாலை 4:00 முதல், இரவு 9:00 மணி வரை, பஸ் ஸ்டாண்டில் இருந்து காமராஜர் ரோடு வழியாக வெளியேறி, பூ மார்க்கெட் கார்னர் வழியாக மாநகராட்சி சிக்னல் சந்திப்புக்கு வர வேண்டும். குறிப்பிட்ட நேரம் தவிர பிற நேரங்களில், வழக்கம் போல் புது மார்க்கெட் வீதி வழியில் பஸ்கள் இயங்கலாம்.திருப்பூரைப் பொறுத்தவரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு முயற்சிகளைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் இது சோதனை முறையில் நடைமுறைப்படுத்துவதாக போலீசார் கூறுகின்றனர்.அதேசமயம், போலீசாரின் இந்த அறிவிப்புக்கு, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.வழக்கமாக, இத்தகைய போக்குவரத்து மாற்றங்கள், மாவட்ட நிர்வாகம் - போலீஸ் - போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்தாலோசனைக்குப் பின்பே நடைமுறைக்கு வருவது வழக்கம். அது, இந்த முறை பின்பற்றப்பட்டதா என்பது கேள்விக்குறி.----திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய மார்க்கெட் வீதி வழியாக பஸ்கள் வெளியேறுவதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு புதிய மார்க்கெட் வீதி வழியாக பஸ்கள் செல்ல முடியாதபடி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
டவுன் பஸ்களையாவது
அனுமதிக்க வேண்டும்புது மார்க்கெட் வீதி வழியாகத்தான் பெரும்பாலான பஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டை விட்டு வெளியேறுகின்றன; மூன்று நிமிடங்களுக்கு ஒரு பஸ் இவ்வீதியில் வெளியேறுகிறது. அதற்கேற்ப பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தப்படுகிறது.போக்குவரத்து மாற்றம் செய்தால், பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து பஸ்கள் உடனடியாக நகர்ந்து செல்ல வழியின்றி, தேக்கமாகும்; நெரிசல் ஏற்படும். டவுன் பஸ்கள் மட்டுமாவது, புது மார்க்கெட் வீதி வழியாக செல்ல போலீசார் அனுமதிக்க வேண்டும்.- மண்டல அதிகாரிகள், அரசுப் போக்குவரத்து கழகம்.
கமிஷனர் படம் வைக்கவும்
--------------ஒரு வாரம் சோதனைக்கு பின் அடுத்த கட்ட முடிவுபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க புது மார்க்கெட் வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து இயக்கம், நெரிசல் குறைவது எப்படி என்பதை முழுமையாக பார்த்து விட்டு, அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.- ராஜேந்திரன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர்.