உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடுரோட்டில் மின்கம்பம் மாற்றி அமைக்கலாமே!

நடுரோட்டில் மின்கம்பம் மாற்றி அமைக்கலாமே!

பல்லடம்;'கொசவம்பாளையம் ரோட்டில், நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பல்லடம், கொசவம்பாளையம் ரோடு, வடுகபாளையம் வழியாக பொள்ளாச்சி மெயின் ரோட்டை இணைக்கும் இணைப்புச் சாலையாக உள்ளது. இதனால், பெரும்பாலான இரு சக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில், மின்கம்பம் ஒன்று நடுரோட்டில் உள்ளது. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.வாகன ஓட்டிகள் சிலர் கூறிய தாவது: பொள்ளாச்சி ரோட்டில் பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால், அதிகளவில் வாகனங்கள் மாற்று வழித்தடமாக கொசம்பாளையம் - -வடுக பாளையம் ரோட்டை பயன் படுத்தி வருகின்றன. போக்கு வரத்து நிறைந்த இந்த ரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் நடுரோட்டில் அமைந்துள்ளது.புதிதாக இவ்வழியே வருவோர், மின்கம்பம் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. கடந்த முறை ரோடு பணி நடக்கும் போதே மின்கம்பத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும். ஆனால், நகராட்சியும், மின்வாரியமும் கண்டு கொள்ளவில்லை. விபத்து அபாயம் உள்ளதால், மின்கம்பத்தை ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ