காரில் 10 பவுன் நகை திருட்டு; ஒருவர் கைது
உடுமலை ; உடுமலை, போடிபட்டி அருகிலுள்ள திருமண மண்டபத்திற்கு, நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சிக்காக கார்த்திகா,27, சென்றுள்ளார். காரின் பின்பக்க கண்ணாடி ஏற்றப்படாமல் இருப்பதை கவனிக்காமல், அவரது நகைகளில் சிலவற்றை காரிலேயே வைத்துவிட்டு, காரை பூட்டிவிட்டு சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது, அவரது காரிலிருந்த நகைகள் திருடு போனது.உடுமலை போலீசார் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்ததில், காரில் நகைகளை திருடிய, தாராபுரத்தை சேர்ந்த ஆறுமுகம், 41 என்பவரை, கைது செய்தனர். அவரிடமிருந்து 10 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.