108 ஆம்புலன்ஸில் குவா... குவா
திருப்பூர்: படியூர், சிக்கண்டபுரத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வலி அதிகமானது. வாகனத்தை ரோட்டோரம் நிறுத்தி பிரசவம் பார்க்கப்பட்டது. பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ நிபுணர் ஜானகி, பைலட் நல்லழகு ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.