உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 10ம் வகுப்பு செய்முறை தேர்வு துவங்கியது

10ம் வகுப்பு செய்முறை தேர்வு துவங்கியது

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. வரும், 29ம் தேதி வரை சுழற்சி முறையில், தேர்வுகள் நடக்கவுள்ளது.பிளஸ் 2 செய்முறைத்தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று பத்தாம் வகுப்புக்கான அறிவியல் செய்முறை தேர்வு துவங்கியது. காலை, 9:00 முதல், 11:00 மணி வரை, மதியம், 2:00 முதல், மாலை, 4:00 மணி வரை இரு வேளைகளிலும் தேர்வு நடந்தது.உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, வரும், 29ம் தேதி வரை பல்வேறு பிரிவுகளாக மாணவ, மாணவியரை பிரித்து, செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்படுமென, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை