உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 11 டன் குட்கா தீவைத்து எரிப்பு

11 டன் குட்கா தீவைத்து எரிப்பு

பல்லடம், ; பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு, கடந்த, 2021ம் ஆண்டு, 11 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை பல்லடம் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், போலீசார் வசம் இருந்த 11 டன் குட்கா பொருட்களையும் அழிக்க கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை பின்பற்றி, டி.எஸ்.பி., சுரேஷ் அறிவுறுத்தலின் பேரில், கணபதிபாளையம் கள்ளிமேடு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து, 11 டன் குட்கா பொருட்களும் தீ வைத்து அளிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி