114 யூனிட் ரத்தம் தானம்
அவிநாசி; அவிநாசியில் செயல்படும் களம் அறக்கட்டளையின் 1000வது யூனிட் ரத்தம் கொடையாக பெறும் பத்தாவது ரத்த தான முகாம், அவிநாசி கொங்கு வேளாளர் அறக்கட்டளையுடன் இணைந்து சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் நடைபெற்றது.ரத்த கொடையாளர்களிடமிருந்து, தானமாக பெறப்பட்ட ரத்தம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரத்த கொடையாளர்களிடமிருந்து ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.மொத்தம் 114 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு, ரத்ததானம் வழங்கியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.