உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.1.25 கோடி மாடு வர்த்தகம்

ரூ.1.25 கோடி மாடு வர்த்தகம்

திருப்பூர், அமராவதிபாளையத்தில் நடந்த கால்நடை சந்தைக்கு நேற்று மாடு வரத்து உயர்ந்தது.கடந்த வாரம் திங்கட்கிழமை நடந்த சந்தைக்கு, 790 மாடுகள் வந்தன. நேற்று நடந்த சந்தைக்கு, 880 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. கன்றுக்குட்டி, 4,000 - 6,000 ரூபாய், காளைகள், 28, 500 - 32, 500, எருதுகள், 27,000 - 31,000, மாடுகள், 29,000 - 32,000 ரூபாய்க்கு விற்பனையானது. சந்தை ஏற்பட்டாளர்கள் கூறுகையில், 'கடந்த வாரம் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை வரத்தும், விற்பனையும் மந்தமாக இருந்தது. நடப்பு வாரம் இயல்புக்கு திரும்பியுள்ளது. 1.25 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை