உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி தொகுதியில் 1.36 லட்சம் பேர் இணைப்பு

அவிநாசி தொகுதியில் 1.36 லட்சம் பேர் இணைப்பு

திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தினேஷ்குமார் கூறியதாவது: 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ், திருப்பூர் வடக்கு மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதியில், 81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 1.26 லட்சம் பேரும், அவிநாசி தொகுதியில் 50 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 1.36 லட்சம் பேரும் இணைக்கப்பட்டுள்ளனர். அண்ணாதுரை பிறந்த நாளில் கட்சி தலைமையின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. கட்சியினர் தங்கள் பகுதியில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன் அடுத்த கட்டமாக கரூரில் முப்பெரும் விழா மாநாடும், மூன்றாவது கட்டமாக மாவட்ட அளவில் இது குறித்த தீர்மான பொதுக்கூட்டம் நடத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ