15வது ஆண்டாக அன்னதானம்
தீபாவளியை முன்னிட்டு, திருப்பூர், டி.பி.ஏ., காலனி, காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரமும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் கமிட்டி சார்பில் 15வது ஆண்டாக, அன்னதானம் வழங்கப்பட்டது.காலை முதல் மாலை வரை தொடர்ந்து பக்தர்கள் அதிகளவில் வழிபாடு செய்தனர்.