மேலும் செய்திகள்
40 கிலோ கஞ்சா: இருவர் கைது
22-Nov-2024
திருப்பூர்; திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தெற்கு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.இதில், பண்டல் பண்ட லாக கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த ராஜமாணிக்கம், 39; திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பாண்டி, 53 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.வெள்ளியங்காடு கே.எம்., நகரில் ராஜமாணிக்கம் பனியன் வியாபாரம் செய்துவந்துள்ளார். கர்நாடகாவுக்கு சென்று, கஞ்சாவை மொத்தமாக வாங்கி தனது காரில் திருப்பூருக்கு கொண்டுவந்து வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்துள்ளார்.பாண்டி, கஞ்சா வாங்கிச் சென்று சில்லரை விற்பனை செய்யும் புரோக்கர் போல் செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய ராஜமாணிக்கத்தின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
22-Nov-2024