உள்ளூர் செய்திகள்

2 கன்று ஈன்ற மாடு

திருப்பூர்; கோவில் வழி, அமராவதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகமணி - மாசிலாமணி தம்பதி. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள், வளர்த்து வரும் பசுமாடு நேற்று இரண்டு கன்றுகளை ஈன்றது.மாசிலாமணி கூறுகையில், ''இதுவரை, நான்கு முறை, கன்று ஈன்றுள்ளது. ஒவ்வொரு முறையும் ஒரு கன்று தான் ஈன்றுள்ளது. இம்முறை தான் முதன் முறையாக இரு கன்று ஈன்றுள்ளது. இரண்டும் ஆரோக்கியத்துடன் இருக்கிறது; மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம்,'' என்றார்.கால்நடை மருத்துவர் கூறுகையில், ''ஆயிரக்கணக்கான மாடுகளில் ஒன்று இதுபோன்று அதிசயமாக 2 அல்லது 3 கன்றுகள் போடும். குறைபாடு இல்லாமல் கன்று ஈனுவதும் பல நேரங்களில் நடக்கும். இது அரிதான செயல் தான்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ