மேலும் செய்திகள்
அமைதிப் புறா வடிவத்தில் அணிவகுத்த மாணவர்கள்
23-Sep-2025
தாராபுரம்; தாராபுரம் பட்டறை மல்லி ரிசார்ட்டில் ரோட்டரி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. தாராபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் பாலாஜி வரவேற்றார். சர்வதேச ரோட்டரியின் பயிற்சி பட்டறையின் துணைத்தலைவர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் கவர்னர் சிவசங்கரன், சண்முகசுந்தரம், கார்த்திகேயன், ராஜா கோவிந்தசாமி, கவர்னர் தனசேகரன் ஆகியோர் ரோட்டரியின் பல தலைப்புகளில் இரண்டு நாள் பயிற்சியளித்தனர். ரோட்டரி மாவட்டத்தை சார்ந்த, 50 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். பயிற்சி முகாம் ஏற்பாடுகளை முகாம் பொறுப்பாளர்கள் பெத்த பெருமாள், முன்னாள் தலைவர் ராஜ்மோகன், சண்முகநாதன் ஆகியோர் செய்திருந்தனர். முன்னாள் செயலர் காளிமுத்து நன்றி கூறினார்.
23-Sep-2025