உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  2 நாள் குடிநீர் நிறுத்தம்

 2 நாள் குடிநீர் நிறுத்தம்

திருப்பூர்: திருப்பூரில் வரும் 4 மற்றும் 5ம் தேதி குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்காக, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. திருப்பூர் மாநகராட்சி 2, 3 மற்றும் நான்காவது குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இவற்றில் மேட்டுப்பாளையம், 4வது குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பெறப்படும் பிரதான குடிநீர் குழாய்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர்வால்வுகள் நெடுஞ்சாலைத்துறை ரோடு விரிவாக்க பணி காரணமாக, மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. இதன் காரணமாக, வரும் 4 மற்றும் 5ம் தேதி என, இரு தினங்கள் மட்டும் குடிநீர் நிரப்பும் பணி நிறுத்தப்பட உள்ளது. எனவே, மாநகரில் குடிநீர் பகிர்மானத்தில் இருதினங்கள் குடிநீர் பெறப்படுவது தடைப்படுவதால், இரு தினங்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து, சிக்கனமாக, நன்கு காய்ச்சி குடிநீரை பருக வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ