உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் பலி

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் பலி

திருப்பூர்; கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் இறந்தனர். கரூரில் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலியானவர்களில், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காமராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 33; செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த கோகுலபிரியா, 29 ஆகியோர் அடங்குவர். கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்,நேற்று காலை வெள்ளகோவிலுக்கு, இருவரது சடலமும் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் சாமிநாதன் தலைமையில் தி.மு.க.,வினர், இரு குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். த.மா.கா., தலைவர் வாசன், முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர் மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். போலீசார் கூறியதாவது: இறந்த கோகுலபிரியா, தனது கணவர் ஜெயபிரகாஷ், மகள் கவுசிகா, 4 ஆகியோருடன் கூட்டத்துக்கு சென்றுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால், குழந்தையை அழைத்து கொண்டு கணவர் வெளியேறினார். கோகுலபிரியா விஜயை அருகில் பார்த்து விட்டு வருவதாக சென்ற போது, நெரிசலில் சிக்கி இறந்தது தெரிந்தது. இறந்த மணிகண்டன் த.வெ.க உறுப்பினராக உள்ளார். நண்பர்களுடன் கூட்டத்துக்கு சென்றது தெரியவந்தது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !