உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கன்டெய்னர் லாரி கவிழ்ந்து 2 பெண்கள் உடல் நசுங்கி பலி

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து 2 பெண்கள் உடல் நசுங்கி பலி

பல்லடம்:பல்லடம் அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், பெண்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொள்ளாச்சி ரோட்டில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று, நேற்று மதியம் நால்ரோடு சிக்னலில், திருச்சி ரோட்டில் செல்ல திரும்பியது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, டூ-வீலரில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் மீது கவிழ்ந்தது.இதில், இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணையில், மகாலட்சுமி நகரை சேர்ந்த கிருத்திகா, 35, அவரது தாய் மகாராணி, 54, என, தெரிய வந்தது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், மூன்று கிரேன்கள் உதவியுடன், கன்டெய்னரின் உடைந்த பகுதியை முதலில் அகற்றினர். பின், நசுங்கி கிடந்த பெண்களின் உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை